சர்வதேச சந்திரன் ஆய்வு நிலையம் பற்றிய ஒத்துழைப்பு
2023-04-25 20:15:51

ஆழமான விண்வெளி ஆய்வு பற்றிய முதலாவது சர்வதேசக் கூட்டம் ஏப்ரல் 25ஆம் நாள் ஆன்ஹு மாநிலத்தின் ஹேஃபெய் நகரில் துவங்கியது. சர்வதேச சந்திரன் ஆய்வு நிலையம் பற்றிய ஒத்துழைப்புக்கான கூட்டறிக்கையில் சீன விண்வெளி நிர்வாகமும் ஆசிய-பசிபிக் விண்வெளி அமைப்பும் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் கையொப்பமிட்டன.

சர்வதேச சந்திரன் ஆய்வு நிலையத்தின் செயல் விளக்கம், திட்டப்பணியின் நடைமுறையாக்கம், செயல்பாடு மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் இருதரப்பும் பரந்தளவில் ஒத்துழைப்புகளை மேற்கொள்ளும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சீன சந்திரன் ஆய்வு திட்டத்தின் தலைமை வடிவமைப்பாளரும், ஆழமான விண்வெளி ஆய்வகத்தின் இயக்குநருமான வூ வெய்ரென் வழங்கிய அறிக்கையில், சர்வதேச சந்திரன் ஆய்வு நிலையத்தின் கட்டுமானத் திட்டத்தை விளக்கிக் கூறியதோடு, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஒத்துழைப்பு முன்மொழிவையும் விடுத்தார்.