முதல் காலாண்டில் சீனாவின் தங்கம் உற்பத்தி மற்றும் நுகர்வு அதிகரிப்பு
2023-04-25 20:10:37

சீன தங்க சங்கம் ஏப்ரல் 25ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் தங்கம் உற்பத்தி 84.972 டன்னை எட்டி, கடந்த ஆண்டின் இதேகாலத்தை விட 1.88 விழுக்காடு அதிகரித்தது. இதே காலக்கட்டத்தில் தங்கம் நுகர்வு 291.58 டன்னை எட்டி, 12.03 விழுக்காடு அதிகரித்தது.

மேலும், சீன மக்கள் வங்கி முதல் காலாண்டில் 57.85 டன் தங்கம் கையிருப்பை அதிகரித்தது. கடந்த நவம்பர் முதல் இவ்வாண்டு மார்ச் வரை, சீன மத்திய வங்கி தொடர்ந்து 5 மாதங்களாக தங்கம் கையிருப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச் இறுதிவரை சீனாவின் தங்கம் கையிருப்பு 2068.38 டன்னை எட்டியுள்ளது.