பெய்ஜிங்கில் நடைபெறும் உலக வர்த்தகம் மற்றும் முதலீடு முன்னேற்ற மாநாடு
2023-04-26 16:26:50

2023ஆம் ஆண்டு உலக வர்த்தகம் மற்றும் முதலீடு முன்னேற்ற மாநாடு மே 24ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்க உள்ளது என்று சீன வர்த்தக முன்னேற்ற சங்கம் ஏப்ரல் 26ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

துவக்க விழா மற்றும் 4 கருத்தரங்குகள் நடத்தப்படும் இம்மாநாட்டில், வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், முக்கிய சர்வதேச அமைப்புகள் மற்றும் பொருளாதார நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், உலகின் 500 முன்னணி தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல விருந்தினர்கள் பங்கெடுக்க உள்ளனர்.

சீனாவின் நவீனமயமாக்கம், பசுமை வளர்ச்சி, எண்ணியல் பொருளாதாரம் போன்ற கவனத்தை ஈர்க்கும் கருப்பொருட்களில் அவர்கள் விவாதம் நடத்தி, உலகப் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு தொழிற்துறை மற்றும் வணிகத் துறையின் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.