சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு
2023-04-26 15:21:08

சூடானில் இருந்து முதல் கட்டமாக 278 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இந்திய கடற்படைக்குச் சொந்தமான சுமேதா கப்பல் மூலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து இந்தியா செல்ல உள்ளனர்.

காவேரி என அழைக்கப்படும் இம்மீட்புப் பணிக்காக மற்றொரு கப்பல் சூடானைச் சென்றடைந்துள்ளதாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்தார். கடந்த திங்கள்கிழமை காவேரி மீட்புப் பணி அறிவிக்கப்பட்ட பின், சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்தை அடைந்துள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்தார்.

இதனிடையே, இம்மீட்புப் பணியை மேற்பார்வையிடும் விதம் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் ஜெட்டா சென்றுள்ளார்.