சீனா மற்றும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு ஒத்துழைப்புக்கான நிறைவு நிகழ்ச்சி: ஷிச்சின்பிங் வாழ்த்து
2023-04-26 15:17:56

சீனா மற்றும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு ஒத்துழைப்பு பற்றிய 50ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சிக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 26ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

வாழ்த்துச் செய்தியில், கடந்த 50ஆண்டுகளில், சீனா எப்பொழுதும் சர்வதேச அறிவுசார் சொத்துரிமையின் பலதரப்புவாத அமைப்புமுறையை உறுதியுடன் பேணிக்காத்து, உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்புடனான ஒத்துழைப்பை ஆழமாக்கி, பல சாதனைகளைப் பெற்றுள்ளது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

மேலும், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்புடனான நட்பு ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கி, உலக அறிவுசார் சொத்துரிமை ஆட்சிமுறை மேலும் நியாயமாக வளர்ப்பதை முன்னேற்றி, மனித குலத்துக்கு நலன்களை பயக்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.