சீன-ஆசியான் வேளாண் துறை ஒத்துழைப்பு நிகழ்ச்சிக்கு சீன தலைமை அமைச்சரின் வாழ்த்துகள்
2023-04-26 17:09:27

சீன-ஆசியான் வேளாண் துறை வளர்ச்சி மற்றும் உணவு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆண்டு நிகழ்வின் துவக்க விழாவில் சீன தலைமை அமைச்சர் லீ ச்சியாங் வாழ்த்துரை நிகழ்த்தினார்.

வேளாண் துறை மற்றும் உணவு பாதுகாப்பானது, அமைதி நிதானம் வளர்ச்சி செழுமை ஆகியவற்றை நனவாக்குவதற்கான அடிப்படையாகும். இது சீன-ஆசியான் ஒத்துழைப்பின் முக்கிய துறையாகும். இந்த ஆண்டு நிகழ்வைச் சீராக நடத்துவது மிகவும் முக்கியமானது என்று லீ ச்சியாங் தெரிவித்தார்.

ஆசியான் நாடுகளுடன் இணைந்து, வேளாண் துறையின் பசுமையான வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, கிராமப்புற வளர்ச்சி, பொலிவுறு வேளாண்மை, எண்ணியல் கிராமம் ஆகியவற்றை ஆழமாக்க சீனா விரும்புகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.