இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிக் குழுவுடன் லியூ ஜியான்சாவ் சந்திப்பு
2023-04-26 17:11:05

இலங்கை மின்சாரம் மற்றும் எரியாற்றல் துறையின் இணை அமைச்சர் சானகா தலைமையிலான இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிக் குழுவுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சர் லியூ ஜியான்சாவ் ஏப்ரல் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார்.

சீன-இலங்கை அரசியல் கட்சிகளுக்கிடையிலான பரிமாற்றம், நாட்டின் ஆட்சிமுறை அனுபவங்களின் பகிர்வை ஆழமாக்குவது, இரு தரப்புறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்றுவது ஆகியவை குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாற்றிக் கொண்டனர்.