அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டி:பைடன்
2023-04-26 10:51:25

அமெரிக்க அரசுத் தலைவரும் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினருமான பைடன் அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக 25ஆம் நாள் அறிவித்தார்.

"நாட்டின் ஆத்மாவுக்காக அமெரிக்கா இன்னும்" போராடி வருகின்றது. "இப்பணியை நிறைவேற்ற " இன்னும் கால அவகாசம் தேவை என்று குடியரசு கட்சியின் தீவிரவாத சக்திக்குப் பதிலளித்த பைடன் கூறினார்.

டொனல்ட் டிரம்பிற்கு இப்போது 76 வயதாகிறது. 2022இல் அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்தார். பொது மக்கள் கருத்து கணிப்பின் படி, குடியரசுக் கட்சியில் மற்றவர்களை விட அவர் முன்னணியில் உள்ளார்.

அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தல் 2024 நவம்பரில் நடைபெற உள்ளது. என்பிசி அமெரிக்கத் தேசிய ஒலிபரப்பு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட கருத்து கணிப்பின் படி, பைடனுக்கும் டிரம்பிற்கும் இடையிலான இரண்டாவது போட்டியில் அமெரிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.