பனி போர் சிந்தனையுடன் செயல்பட்ட பிரிட்டனுக்கு சீனாவின் வேண்டுகோள்
2023-04-26 18:23:47

சீனாவின் மீது பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட கருத்து குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 26ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

குழுவான அரசியல், பனி போர் சிந்தனை ஆகியவை வரலாற்று வளர்ச்சிப் போக்கை மீறி, பிரிட்டனை உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் நலனுக்குப் பொருத்தமற்றது என்றார்.

தைவான், ஹாங்காங், சின்ஜியாங் ஆகிய பிரச்சினைகள், சீனாவின் உள் விவகாரங்களாகும். வெளிப்புற சக்திகள் இவற்றில் தலையிட கூடாது. பிரிட்டன் கவனமாக செயல்பட்டு சீனாவின் மீது நியாயமற்ற முறையில் குறைகூறி, சீனாவின் உள் விவகாரத்தில் தலையிடும் செயலை நிறுத்தி, சீன-பிரிட்டன் உறவுக்கும் உலக அமைதிக்கும் துணை புரியும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாக அவர் கூறினார்.