சூடான் நிலைமை மீது ஐ.நாவின் கவலை
2023-04-26 10:52:46

சூடான் நிலைமை பற்றி ஐ.நா.பாதுகாப்பவை ஏப்ரல் 25ஆம் நாள் அவசரப் பரிசீலனையை மேற்கொண்டது. சூடான் மோதலில் உள்ள இரு தரப்புகளும் வெகுவிரைவில் சண்டையை நிறுத்தி, நிலைமை மேலும் தீவிரமாகாமல் தவிரிக்குமாறு சீனப் பிரதிநிதி வேண்டுகோள் விடுத்தார். மேலும், சர்வதேச சமூகம் சூடானின் இறையாண்மை மற்றும் தலைமை உரிமைக்கு மதிப்பு அளித்து, சூடான் மற்றும் பிராந்திய நாடுகளின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

ஐ.நா.தலைமைச் செயலாளர் குட்ரெஸ், சூடான் பிரச்சினைக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி பெயர்ட்ஸ், ஐ.நா. மனித நேய விவகார உதவிச் செயலாளர் ஜாய்ஸ் ம்சுயா உள்ளிட்டோர் சூடான் நிலைமை பற்றி அறிமுகம் கூறினர்.

சூடான் மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குட்ரெஸ் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், ஐ.நா. சூடான் துறைமுகத்தில் தற்காலிக பணி வளாகத்தை அமைத்து, சூடான் மக்களுக்கு சேவை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

பெயர்ட்ஸ் கூறுகையில், மோதலில் உள்ள இரு தரப்பும், மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்தின. 25ஆம் நாள் காலை வரை, 427 பேர் உயிரிழந்தனர், 3700க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 72 மணிநேர துப்பாக்கி சண்டை நிறுத்தும் உடன்படிக்கை அமலுக்கு வந்த போதிலும், சில துப்பாக்கி சண்டைகள் இன்னும் ந்ந்து வருகின்றன. இரு தரப்புகளுக்கு பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் விருப்பம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.