உலகத்தின் மூப்படைதல் பிரச்சினை
2023-04-26 14:36:24

உலகில் முன்னென்றும் கண்டிராத வேகத்தில் மூப்படையும் விவகாரம் தீவிரம் அடைந்துள்ளது என்று உலக வங்கி ஏப்ரல் 25ஆம் நாள் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. குடியேறுவோரைப் பல நாடுகள் மென்மேலும் சார்ந்து, தனது நீண்டகால வளர்ச்சி உள்ளார்ந்த ஆற்றலை நனவாக்கியுள்ளன.

பணக்கார நாடுகளும் மென்மேலும் நடுத்தர வருமான நாடுகளும் மக்கள் தொகை குறைவு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன. வேலைவாய்ப்பு மற்றும் திறமைசாலிகளுக்கான உலகளாவிய போட்டியை இது தீவிரமாக்கியுள்ளது. அதே வேளையில், பெரும்பாலான குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் மக்கள் தொகை விரைவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அழுத்தத்தை அந்த நாடுகள் எதிர்கொள்ளும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.