சூடானிலுள்ள சீனக் குடிமக்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்துச் சென்ற சீன இராணுவம்
2023-04-27 14:15:25

சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் டான் கெஃபி 27ஆம் நாள் சூடானில் உள்ள சீனக் குடிமக்களை அவசரமாக அழைத்து செல்ல இராணுவம் போர்க்கப்பல்களை அனுப்பியது குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், அண்மையில் சூடானில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகின்றது. இதனால், சூடானில் சீனக் குடிமக்களின் உயிர் மற்றும் சொத்துகளின் பாதுகாப்பைப் பாதுகாக்கும் வகையில், பெய்ஜிங் நேரப்படி 26ஆம் நாள் அவர்களைத் தாயகத்திற்கு அழைத்து செல்ல சீனக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றார்.