உலகளவில் மின்சார வாகனங்களின் விற்பனைத் தொகை அதிகரிப்பு
2023-04-27 14:16:02

இவ்வாண்டு, உலகளவில் மின்சார வாகனங்களின் விற்பனைத் தொகை, 1 கோடியே 40 இலட்சத்தை எட்டி, 2022 ஆம் ஆண்டை விட 35 விழுக்காடு அதிகரித்துள்ளது. வாகனச் சந்தையின் ஒட்டுமொத்த பங்கில் மின்சார வாகனங்கள் 18 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் 26ஆம் நாள் வெளியிட்ட 2023ஆம் ஆண்டின் உலக மின்சார வாகன முன்னாய்வு பற்றிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது, மின்சார வாகனங்கள், சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் சீனா முதல் இடத்தை வகிக்கினறது. உலகளவில் விற்கப்பட்டுள்ள மின்சார வாகனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை சீனாவில் உள்ளன. இதைத் தவிர இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.