ஒகினவாகென் போர்க்களமாக மீண்டும் மாற கூடாது
2023-04-27 17:13:58

ஜப்பான் தற்காப்பு படையினர்களும் வாகனங்களும் ஒகினவாகெனின் துறைமுகங்கள் மற்றும் சாலைகளில் புகுந்துள்ளனர் என்று ஏப்ரல் 26ஆம் நாள் காலை உள்ளூக் மக்கள் கண்டறிந்தனர். அங்கே ஏவுகணை அமைப்பு ஒன்று வரிசைப்படுத்தப்படும். ராணுவ ஆயத்தப் பணியை வலுப்படுத்திய ஜப்பான் அரசு, அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறியுள்ளதோடு, பிரதேச அமைதி மற்றும் நிதானத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று உள்ளூர் செய்தி ஊடகங்கள் குற்றஞ்சாட்டின.

ஒகினவாகென் மாவட்ட அவை உறுப்பினர்கள் குழு, ஜப்பானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம், உட்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றிற்கு அமைதியான தூதாண்மை பற்றிய தீர்மானம் ஒன்றை வழங்கியது.

மாவட்ட அவை பெயரில், சீனாவின் மீதான தவறான கொள்கை குறித்து ஜப்பான் அரசின் மீது சந்தேகம் தெரிவிக்கும் முதல் ஆவணம் இதுவே ஆகும்.

கடந்த சில ஆண்டுகளில், உலக அரசியல் நிலைமை ஆழமாக மாறி வருகின்றது. சீனாவை தனது முதன்மை எதிராளியாக அமெரிக்கா தவறாக கொண்டிருப்பதோடும், ஆசிய-பசிபிக் விவகாரங்களில் நேட்டோ தலையீடு செய்து வருவதோடும், அரசியல் அமைப்புச் சட்டத்தை முறியடித்து ராணுவ வாதத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பைக் கண்டறிந்துள்ளதாக  ஜப்பானின் வலது சாரி அரசியல் சக்தி கருதுகின்றது.

அமைதி மிக அரிதானது என்பது, போரில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒகினவாகென் மக்களுக்கு தெரியும். ஜப்பான் அரசின் ராணுவ விரிவாக்கம் பற்றி அவர்களின் மன நிறைவின்மை மற்றும் கவலைகளும் சீன-ஜப்பான் நட்புறவு மற்றும் பிரதேச அமைதியின் மீதான எதிர்பார்ப்பும் இத்தீர்மானத்தில் வெளிக்காட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.