உலக பொருள் புழக்க தரவரிசையில் இந்தியா உயர்வு
2023-04-27 17:27:13

உலகின் பொருள் புழக்க தரவரிசையில், இந்தியா 139 நாடுகளிடையே 6 இடங்கள் உயர்ந்து 38ஆவது இடத்துக்கு  பிடித்து முன்னோறியுள்ளது என்று உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட பொருள் சரக்கு போக்குவரத்து செயல்பாட்டு குறியீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 2015ஆம் ஆண்டு முதல் பொருள் புழக்கத் துறையின் செயல்திறனை உயர்த்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்று தெரிவித்தது.

மேலும், துறைமுக நுழைவாயில்களை உள் நிலப் பகுதியிலுள்ள பொருளாதார மண்டலங்களுடன் இணைக்கும் வர்த்தக உள்கட்டமைப்பில் அரசு முதலீடு செய்துள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.