சின் காங்கின் தலைமையில் 4ஆவது சீன-மத்திய ஆசிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
2023-04-27 19:06:03

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான சின் காங் ஏப்ரல் 27ஆம் நாள் ஷிஆன் நகரில் நடைபெற்ற 4ஆவது சீன-மத்திய ஆசிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

சீனாவும் மத்திய ஆசிய நாடுகளும் நல்ல அண்டை நாடுகளாகவும் நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் இருக்கின்றன. சிக்கலாக மாறி வரும் நிலைமையில், நாங்கள் உறுதியுடன் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். மைய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினையில் தொடர்ந்து ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்க உறுதிப்படுத்த வேண்டும். புதிய உயர் தொழில் நுட்பம், மருத்துவம், ஊடகம் உள்ளிட்ட துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை விரிவாக்க வேண்டும். மனிதகுல பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்துக்கும் உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியின் முன்னேற்றத்துக்கும் பங்காற்ற வேண்டும் என்று சின் காங் கூறினார்.

மேலும், மே மாதத்தில் நடைபெற உள்ள சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டுக்கு இந்த வெளியுறவு அமைச்சர்கள் அரசியல் ரீதியிலான ஆயத்தம் செய்துள்ளனர். தவிரவும், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உக்ரைன் அரசுத் தலைவருடன் மேற்கொண்ட ஆக்கப்பூர்வ தொடர்பை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.