6வது டிஜிட்டல் சீனா உச்சி மாநாடு துவக்கம்
2023-04-27 17:07:05

6வது டிஜிட்டல் சீனா உச்சி மாநாடு ஏப்ரல் 27ஆம் நாள் ஃபூஜியான் மாநிலத்தின் ஃபூசோ நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் தலைவர் லீ ஷுன்லெய் துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.

டிஜிட்டல் சீனா கட்டுமானத்தை விரைவுபடுத்தி, சீனாவின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது, நடப்பு உச்சி மாநாட்டின் தலைப்பாகும். இம்மாநாட்டில், டிஜிட்டல் சீனா கட்டுமானத்தின் புதிய சாதனைகள் காட்டப்பட்டு, வளர்ச்சி அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படும். டிஜிட்டல் சீனா கட்டுமானத்தின் மூலம் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றி, சீனாவின் நவீனமயமாக்கத்துக்கு இம்மாநாடு ஆதரவு அளிக்கிறது.

மேலும், 2 நாட்கள் நீடிக்கும் இந்த உச்சி மாநாட்டின்போது, கருத்தரங்குகள், டிஜிட்டல் சீனா கட்டுமானத்தின் சாதனைகள் கண்காட்சி, டிஜிட்டல் உற்பத்திப் பொருட்காட்சி, புத்தாக்கப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.