சீன மற்றும் உக்ரைன் அரசுத் தலைவர்களின் தொடர்பு
2023-04-27 15:37:03

சீன மற்றும் உக்ரைன் அரசுத் தலைவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஐரோப்பா மற்றும் ஆசியப் பிரிவின் துணைத் தலைவர் யூ ஜுன் சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களிடம் விளக்கி கூறினார்.

அப்போது உக்ரைன் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவானதாகவும் நிலையானதாகவும் உள்ளதை இத்தொடர்பு காட்டுகிறது எனக் குறிப்பிட்ட அவர்,  சர்வதேச விவகாரங்களில் சீனாவின் புறநிலை மற்றும் நியாயமான நிலைப்பாட்டையும் ஒரு பெரிய நாட்டின் பங்கையும் இது வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

மேலும், உக்ரைன் பிரச்சினையில் சீனா எப்போதுமே அமைதியின் பக்கம் நிற்பதாகவும்,  அரசியல் மூலம் நெருக்கடியைத் தீர்க்கும் முறையை ஆதரிப்பதாகவும் கூறினார்.

 

இதைத் தவிர, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டிய ஒத்த கருத்துக்களின் படி, சீனா அனுப்பும் சிறப்புப் பிரதிநிதி உக்ரைன் உள்ளிட்ட பிற நாடுகளில் பயணம் மேற்கொள்ளும் வகையில், சீன அரசு ஐரோப்பா மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி லி ஹூயை நியமித்துள்ளது. உக்ரைன் நெடுக்கடியை அரசியல் மூலம் தீர்ப்பது குறித்து பல்வேறு நாடுகளுடன் ஆழ்ந்த பரிமாறிக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.