அமெரிக்கச் சட்ட செயலாக்க வாரியத்தின் செயலுக்கு சீனப் பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் எதிர்ப்பு
2023-04-27 11:48:23

"நாடு கடந்த ஒடுக்குமுறை" எனக் கூறப்படும் ஒன்றை தீய எண்ணத்துடன் உருவாக்கி, அது தொடர்பாகப் புனையப்பட்ட சான்றுகளை ஒன்றாக திரட்டி, சீனாவின் 40 சட்ட செயலாக்க அதிகாரிகள் மீது அமெரிக்க நீதி அமைச்சகம் சமீபத்தில் வழக்குத் தொடுத்தது. இதற்கு சீனப் பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் பெய்ஜிங்கிலுள்ள அமெரிக்க நீதி அமைச்சகம் மற்றும் எஃப்.பி.ஐ.வின் பிரதிநிதிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சீன பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஏப்ரல் 26ஆம் நாள் தெரிவித்தார்.

 

அமெரிக்காவின் சட்ட செயலாக்க வாரியம், குற்றவியல் வழக்கு என்ற பெயரில் அரசியல் தந்திரம் செய்து சீனா குறித்து அவதூறு செய்து வருவதைச் சீனப் பொது பாதுகாப்பு அமைச்சகம் உறுதியாக எதிர்ப்பதோடு,  அமெரிக்கத் தரப்பு அரசியல் தந்திரத்தையும் சட்டத்துறையிலான எதேச்சாதிகார செயலையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.