சீன அதிகாரிகள் மீது வழக்குதாக்கல் செய்த அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
2023-04-27 17:49:29

சீன அரசு அதிகாரிகள் மீது அமெரிக்கா தீய நோக்கத்துடன் சான்றுகளை புனைத்து வழக்குதாக்கல் செய்தது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் ஏப்ரல் 27ஆம் நாள் கூறுகையில், அமெரிக்கா அரசியல் சூழ்ச்சியுடன் சீனா அச்சுறுத்தல் என்ற கூற்றை பரப்பி வரும் செயலை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் செயல், அடிப்படை உண்மைகளையும் சட்ட ஒழுங்கு கோட்பாட்டையும் மீறியுள்ளது. தவறான செயல்களை அமெரிக்கா உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிடில், சீனா உறுதியுடன் பதில் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.