அமெரிக்க கண்காணிப்பு விமானத்தின் தைவான் நீரிணை பயணத்துக்கு சீனா எதிர்ப்பு
2023-04-28 16:54:00

அமெரிக்காவின் பி 8எ ரக கண்காணிப்பு விமானம் ஒன்று ஏப்ரல் 28ஆம் நாள், தைவான் நீரிணையின் மேல் பறந்து சென்றது. இது குறித்து சீன மக்கள் விடுதலை ராணுவப் படையின் கிழக்கு மண்டலப் பிரிவின் செய்திதொடர்பாளர் கூறுகையில்,

தைவான் நீரிணை பகுதியில் இவ்விமானத்தின் பயணத்தை சீனா முழுமையாக கண்காணித்துள்ளது. கிழக்கு மண்டல பிரிவு எப்போதுமே உயர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு,  பாதுகாப்பையும் பிரதேச அமைதி மற்றும் நிதானத்தையும் உறுதியாக பேணிக்காக்கும் என்றார்.