அமெரிக்காவில் குறைந்து வரும் ஜோ பைடனுக்கு ஆதரவு விகிதம்
2023-04-28 14:48:56

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் மீண்டும் அரசுத் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிட்டு வரும் போது, தொடர்புடைய கருத்துக் கணிப்பில்  கலந்து கொண்டோரில், அவரின் பதவிக்காலத்தில் பைடனின் பணிசெயல்திறனை ஏற்றுக்கொள்வதாக 37விழுக்காட்டினர் மட்டுமே தெரிவித்துள்ளனர். 2022ஆம் ஆண்டின் ஜுலை மாதத்துக்குப் பின், இது மிக குறைந்த நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பைடனுக்கான ஆதரவு விகிதம் குறைவு, பொருளாதாரத்துக்கான அமெரிக்கர்களின் கருத்துடன் தொடர்புடையது. இதனிடையே அமெரிக்கப் பொருளாதாரம் சீராகி வருவதாக 19 விழுக்காட்டினரும், மோசமாகி வருவதாக 75விழுக்காட்டினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.