ரென்மின்பி மூலம் சீனப் பொருட்களுக்கு பணம் செலுத்த அர்ஜெண்டினா அறிவிப்பு
2023-04-28 11:28:08

அமெரிக்க டலாருக்குப் பதிலாக ரென்மின்பி மூலம் சீன இறக்குமதிப் பொருட்களுக்கு பணம் செலுத்தி பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று அர்ஜெண்டின பொருளாதாரத் துறை அமைச்சர் செர்ஜியோ மஸ்ஸா 26ஆம் நாள் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதோடு, அர்ஜெண்டினா-சீனா இடையேயான நாணய பரிமாற்ற உடன்படிக்கை, அந்நிய செலாவணி கையிருப்பையும் இரு தரப்பு வர்த்தகத்தையும் பலப்படுத்த உதவும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.