சீனாவுக்கு ஏற்றுமதிக் கட்டுப்பாடு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2023-04-28 18:17:31

அரை மின் கடத்தி தயாரிப்புக்குத் தேவையான வேதியியல் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு உத்தேசித்து வருகிறது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஏப்ரல் 28ஆம் நாள் கூறுகையில், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஒன்றுக்கொன்று நம்மை புரியும். அரை மின் கடத்தியின் முக்கிய சந்தையாகச் சீனா திகழ்கிறது. குறிப்பிட்ட நாடுகளின் இச்செயல் வேறு நாடுகளின் நலனை மட்டுமல்ல, சொந்த நலனையும் சீர்குலைக்கும் என்றார்.

மேலும், குறிப்பிட்ட சில நாடுகள் சந்தையின் பொருளாதார விதிமுறைக்கு மதிப்பு அளித்து, விதிமுறையைப் பேணிக்காப்பது மற்றும் சொந்த நலனைக் கருத்தில் கொண்டு, சீனாவுடன் இணைந்து சர்வதேசப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.