450 கோடி அமெரிக்க டாலர் ஏற்றுமதி தொகை எட்டப்பட்ட பொருட்காட்சி
2023-04-28 18:15:14

133ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்காட்சியின் 2ஆவது கட்டம் ஏப்ரல் 27ஆம் நாள் நிறைவுற்றது. இக்காலக்கட்டத்தில், சுமார் 12 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் பங்கெடுத்தன. அதோடு, மென் ரக தொழில் தயாரிப்புகள் முக்கியமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டன. சீன வணிக அமைச்சகம் வெளிளியிட்ட தரவுகளின்படி, ஏப்ரல் 26ஆம் நாள் வரை, இப்பொருட்காட்சியின் 2ஆவது கட்டத்தில் மொத்தம் 8.15 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்தனர். ஏற்றுமதி வர்த்தகத் தொகை 450 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.

நடப்பு பொருட்காட்சியின் 2ஆவது கட்டத்தில் இறக்குமதி கண்காட்சி நடத்தப்பட்டது இதுவே முதன்முறை. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள 22 நாடுகளின் 370 தொழில் நிறுவனங்கள் இதில் உற்சாகத்துடன் பங்கெடுத்தன. இறக்குமதி கண்காட்சியில் பங்கெடுத்த தொழில் நிறுவனங்களின் மொத்த எண்ணிகையில் இது 70 விழுக்காட்டுக்கு மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.