© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஐ.நாவின் 4ஆவது உலக தரவு மன்றக் கூட்டம் ஏப்ரல் 27ஆம் நாள் ஹாங்சோ நகரில் நிறைவுற்றது. இக்கூட்டத்தின் சாதனை ஆவணமாக ஹாங்சோ அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
உயர்தரம், உரிய நேரம், திறப்பு, அனைவரையும் உள்ளடக்கம் ஆகிய தன்மைகளைக் கொண்டுள்ள தரவு, நிலையான வளர்ச்சி இலக்கை கூடிய விரைவில் நனவாக்குவதற்கும், பல்வேறு நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கும் மிக முக்கியமானதாகும் என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு மன்றக் கூட்டத்துக்காக, 2000 சதுர மீட்டர் பரப்பளவுடைய காட்சியரங்கு அமைக்கப்பட்டது. தரவு மேலாண்மையில் சீனாவின் அனுபவங்களும் உலக நடைமுறைகளும் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதிக பார்வையாளர்களை வரவேற்ற சீனாவின் அறிவார்ந்த புள்ளியியல் காட்சியிடத்தில், பெருந்தரவு, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகியவை பெரும் கவனத்தை ஈர்த்துள்ள துறைகள் என்பது குறிப்பிடத்தக்கது.