யுன் சிக்யோலின் அமெரிக்கக் கொள்கை அவமான வெளிநாட்டுறவு:எதிர்ப்புக் கட்சி
2023-04-29 19:04:42

யுன் சிக்யோலின் அமெரிக்கக் கொள்கை அவமான வெளியுறவுக் கொள்கை ஆகும் என்று தென் கொரியாவின் மிகப் பெரிய எதிர் கட்சியான கொரிய மின்ச்சோ கட்சியின் தலைவர் லீ ஜெய்மிங் 28ஆம் நாள் விமர்சித்தார்.

தென் கொரிய-அமெரிக்க உச்சி மாநாடு பற்றி அவர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இக்கட்சியின் கூட்டம் ஒன்றில் கூறுகையில், முன்பு கவலைப்படுத்தப்பட்டது போல் இந்த உச்சி மாநாடு தென் கொரியாவின் முழு அடிபணிதலுடன் முடிவடைந்தது என்றார். சில்லுகளும் அறிவியலும் பற்றிய  சட்டம், பணவீக்க குறைப்புச் சட்டம் உள்ளிட்ட மையப் பிரச்சினைகளில் சொந்த நாட்டின் தொழில்துறையையும் தொழில் நிறுவனங்களையும் பாதுகாக்க யுன் சிக்யோல் அரசு முற்றிலும் தவறியது என்று கூறிய அவர்,  உக்ரைன், தைவான் உள்ளிட்ட பிரச்சினைகளிலும் யுன் சிக்யோல் எடுத்த தகுதியற்ற நிலைப்பாட்டைக் குறைகூறினார்.

யுன் சிக்யோலின் வாஷிங்டன் பயணத்துக்குப் பின், அவர் தலைமையிலான தென் கொரியா புதிய பனிப்போரின் மையம் நோக்கி செல்வதாக அந்நாட்டின் மக்களிடையில் பரவலாக கவலை எழுந்துள்ளது.