இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு
2023-04-29 16:01:34

இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு அளவு, ஏப்ரல் 21 நிலவரப்படி, 216 கோடி டாலர் குறைந்து 58,425 கோடி டாலரை எட்டியதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய 2 வாரங்களில் அன்னியச் செலாவணி கையிருப்பு 800 கோடி டாலர் அதிகரித்து 58,641 கோடி டாலராக இருந்தது.

அன்னியச் செலாவணியில் முக்கிய அங்கமாக இருக்கும் அன்னிய நாணயச் சொத்துகள் மதிப்பும் 214 கோடி டாலர் குறைந்து 51,449 கோடி டாலரை எட்டியது என்று ரிசர்வ் வங்கி வாரந்தோறும் வெளியிடும் புள்ளியியல் தகவலில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, 2021 அக்டோபரில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சமாக 64500 கோடி டாலரை எட்டியது குறிப்பிடத்தக்கது.