முதலாவது காலாண்டில் சீன இருப்புப் பாதை பயணியர் எண்ணிக்கை 75.3 கோடி
2023-04-29 16:57:23

இவ்வாண்டின் முதலாவது காலாண்டில் சீனாவில் இருப்புப் பாதை வழியாக மொத்தம் 75.3 கோடி பேர் பயணித்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 66 விழுக்காடு அதிகமாகும்.

மொத்தம் 97 கோடி டன் பொருட்கள் அனுப்பப்பட்டன. இது கடந்த ஆண்டை விட 2.3 விழுக்காடு அதிகமாகும்.

முதலாவது காலாண்டில் சீனத் தேசிய இருப்புப் பாதை நிறுவனம், 27 ஆயிரத்து 190 கோடி யுவான் வருவாயை நனவாக்கியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 18.2 விழுக்காடு அதிகமாகும்.