சீனாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்:நேபாளம்
2023-04-29 17:32:26

நேபாளத் தலைமையமைச்சர் பிரசண்டா 28ஆம் நாள் சீனாவின் மருத்துவ உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். மனித குலத்தின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தின் பொது எதிர்காலத்தை உருவாக்குவது என்ற கருத்தின் கீழ் சீனாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நேபாளம் எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

சீனா உதவி செய்த நேபாள அரசு பணியாளருக்கான மருத்துவமனை மேம்பாட்டுத் திட்ட ஒப்படைப்பு விழாவிலும் சீனாவின் வெளிநாட்டு மருத்துவ உதவியின் 60வது ஆண்டு விழாவிலும் பிரசண்டா அதே நாளில் காத்மாண்டுவில் கலந்து கொண்டார். கரோனா பரவலின் போது நேபாளத்துக்குத் தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களைச் சீனா வழங்கியது. சீனா காட்டிய “நேர்மையான ஒற்றுமை எழுச்சியை நேபாளம் எப்போதும் நினைவில் கொள்ளும். மருத்துவ தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சீனாவுடன் ஆழ்ந்த கூட்டுறவை வளர்க்க விரும்புவதாக அவர் தெரிவித்தது.

சீனாவின் மருத்துவ உதவி குழுவைச் சேர்ந்த 17 பேருக்குப் பிரசண்டா "தேசிய சுகாதார காவலர் பதக்கம்" வழங்கினார்.