பாதுகாப்பில் பிற எஸ்சிஓ நாடுகளுடன் ஒத்துழைப்போம் – சீனா
2023-04-29 16:00:58

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் இணைந்து சமநிலையிலான, திறன்மிகுந்த மற்றும் நீடித்த பாதுகாப்புக் கட்டுமானத்தை உருவாக்கச் சீனா தயாராக உள்ளது என்று சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லி ஷங்ஃபு தில்லியில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

முன்னதாக, தீவிரவாதத்தை அனைத்து உருவிலும் இருந்து அகற்ற இணைந்து பணியாற்றுவதற்கு எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கு இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அழைப்பு விடுத்ததாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

தில்லியில் நடைபெற்ற எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா, சீனா பாதுகாப்பு அமைச்சர்களைத் தவிர, ரஷியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் பங்கேற்றனர்.