கோஸ்டாரிகா-சீன உறவில் வெற்றி வெற்றி கிடைத்தது!
2023-04-29 19:18:39

கோஸ்டாரிகாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு, பரஸ்பரம் வெற்றி தரும் உறவு என்று கோஸ்டாரிகா அரசுத் தலைவர் ரோட்ரிகோ சாவ்ஸ் ரோப்லிஸ் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளில் இரு தரப்புறவு சுமுகமாக முன்னேறி வலுவடைந்து வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் சீனா, உலகின் 2 மிகவும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. கோஸ்டாரிகா ஒரு சிறிய நாடாகும். இந்நிலையில் முதலீட்டை ஈர்த்து, உள்கட்டமைப்பு வசதிகளுக்கான மூலதனமாக பயன்படுத்துகிறோம். தனியார் மூலதனம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவற்றை ஈர்க்க விரும்புகிறோம். அதேவேளையில் நாளுக்கு நாள் விரிவாகி வரும் சீனச் சந்தை மீதும் ஆர்வம் கொள்கிறோம். சீனாவில், புரதச் சத்துக்கான தேவை அதிகரித்து வருகிறது. இறைச்சி, புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறோம். இதைப் பார்த்தால், கோஸ்டாரிகா மற்றும் சீனா இடையே வெற்றி-வெற்றி சூழ்நிலை நிலவுகிறது என்று சாவ்ஸ் சுட்டிக்காட்டினார்.

கோஸ்டாரிகாவும் சீனாவும் மிகவும் வித்தியாசமான  பொருளாதாரமாகத் திகழ்கின்றன. அதில் இயற்கை உறவு நிலவுகிறது. ஒரு தரப்பு மற்றொரு தரப்பை நிறைவு செய்யும் தன்மை வலுவானது. சிரிய நாடான கோஸ்டாரிகாவுக்கு, சீனா  ஈர்ப்பாற்றல் மிக்க சந்தையாக இருக்கிறது என்றும் சாவ்ஸ் குறிப்பிட்டார்.

2007ஆம் ஆண்டு இரு நாடுகளிடையே தூதரக உறவு நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, இரு தரப்புப் பரிமாற்றங்களில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. புதிய நூற்றாண்டில் மத்திய அமெரிக்க நாடுகளுக்கு மத்தியிலேயே, சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவிய முதல் நாடாகவும், சீனாவுடன் நெடுநோக்குக் கூட்டாளியுறவை உருவாக்கிய முதல் நாடாகவும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் நாடாகவும் கோஸ்டாரிகா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.