டிஜிட்டல் சீனா உச்சிமாநாட்டில் நிறைய சாதனைகள்
2023-04-29 18:46:44

2022ஆம் ஆண்டு சீனாவின் டிஜிட்டல் பொருளாதார மதிப்பு 50.2 லட்சம் கோடி யுவானை எட்டியது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் அதன் பங்களிப்பு 41.5விழுக்காடாக உயர்ந்துள்ளது. மேலும், இந்த மதிப்புத் தொகை, உலக அளவில் 2ஆவது இடம் வகிக்கிறது என்று டிஜிட்டல் சீனா வளர்ச்சி பற்றிய 2022ஆம் ஆண்டு அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஆவது டிஜிட்டல் சீனா உச்சிமாநாடு 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை சீனாவின் ஃபுஜோ மாநகரில் நிறைவு பெற்றது. நடப்பு உச்சிமாநாட்டில் சேர்க்கப்பட்டுள்ள 606 டிஜிட்டல் பொருளாதாரத் திட்டங்களில் சுமார் 33570 கோடி யுவான் முதலீடு செய்யப்படும்.  இந்த முதலீடு முந்தைய உச்சிமாநாட்டில் இருந்ததை விட 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதி, பொருட்களின் இணையம், புதிய ஆற்றல் ஆகிய துறைகள் தொடர்பான முதலீட்டு திட்டங்கள் அடக்கம்.

தவிரவும், நடப்பு உச்சிமாநாட்டில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் புதிய தயாரிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டன. உச்சிமாநாட்டின் கீழ், தரவு வளம், டிஜிட்டல் மேலாண்மை உள்ளிட்ட கருப்பொருள் கொண்ட 20 கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.