சீனாவின் ஆக்கத் தொழிற்துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடு அதிகரிப்பு
2023-04-30 19:24:25

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகத்தைச் சேர்ந்த சேவைத் துறை ஆராய்ச்சி மையமும் சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனமும் 30ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, ஏப்ரலில் சீனாவின் ஆக்கத் தொழிற்துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடு, 49.2 விழுக்காடாகும். ஏப்ரலில் சாதன உற்பத்தி மற்றும் நுகர்வுப் பொருட்கள் துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடு முறையே 50.1% மற்றும் 49.8% ஆகும். தொழிற்துறையின் கண்ணோட்டத்தில், வேளாண் மற்றும் உப உணவுப் பொருட்களின் பதனீடு, உணவு, மது, பானம் மற்றும் தேநீர், பொது உபகரணங்கள், சிறப்பு உபகரணங்கள், ரயில்வே கப்பல் விண்வெளிப் பயண உபகரணங்கள், மின் இயந்திரங்கள் முதலிய தொழில்களின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளின் மீதான மதிப்பீட்டுக் குறியீடு 60 விழுக்காட்டுக்கும் மேலான உயர் மட்டத்தில் உள்ளன. தொழில் வளர்ச்சி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.