இலங்கையில் 12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை
2023-04-30 16:32:11

இலங்கையில் 12 மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மின்னல் அபாய எச்சரிக்கையை அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை பெய்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கு, தெற்கு, வடமேற்கு மற்றும் சபரகமுவா மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவாரா எலியா மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டர் அளவுக்கும் அதிகமாக மழை பதிவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 18 மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கும் எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.