சூடானிலிருந்து சீன மக்களின் வெளியேற்றத்துக்கு சீனப் படை உத்தரவாதம்
2023-04-30 16:34:31

சூடானிலுள்ள சீன மக்களின் உயிர் மற்றும் உடைமையை பாதுகாக்கும் விதம், சீனர்களை வெளியேற்றுவதற்கு சீன ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. தூதரகங்களின் உதவியுடன், ஏப்ரல் 26 முதல் 29ம் நாள் வரை, சூடானிலிருந்து 940 சீனர்களும், 231 வெளிநாட்டவர்களும், சீனக் கடற்படை கப்பல்களின் மூலம், சௌதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்தைச் சென்றடைந்தனர்.

மக்கள் ராணுவம், எப்போதுமே மக்களுக்குச் சேவை புரியும். மக்களின் காப்பாளரான சீன படை, தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பேணிக்காத்து, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூக உருவாக்கத்துக்கு உறுதியான சக்தியாகத் திகழும் என்று சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.