100ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி
2023-04-30 16:31:36

இந்தியத் தலைமை அமைச்சரின் மான் கீ பாத் என அழைக்கப்படும் மனதின் குரல் 100ஆவது நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த குவளைகளைத் தயாரித்து வரும் தமிழகத்தின் பெண்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

நாட்டு மக்களிடையே நேரடியாக உரையாற்றும் விதம் மனதின் குரல் நிகழ்ச்சியை மோடி 2014இல் தொடங்கினார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் பற்றியும் சமூகத்துக்கு சிறந்த பங்களிப்பை ஆற்றி வரும் நபர்கள் பற்றியும் மோடி உரையாற்றி வருகிறார்.

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மான் கீ பாத் 100ஆவது நிகழ்ச்சியில், தமிழக பழங்குடியினப் பெண்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மண்குவளைகள் தயாரிப்புப் பற்றியும், 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து நாசிக் நதிக்கு புத்துயிர் அளித்த்து பற்றியும் சுட்டிக்காட்டினார். தவிரவும், மான் கீ பாத் நிகழ்ச்சி, நான் என்ற எண்ணத்திலிருந்து நாம் என்ற எண்ணத்தைத் தந்துள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.