அமெரிக்க வங்கிகள் தொடர்ந்து திவால்?
2023-05-01 17:19:13

அமெரிக்காவின் சில பிரதேசங்களில் வங்கித் துறை நெருக்கடி ஏற்பட்ட பிறகு  சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவற்றைத் தொடர்ந்து, அமெரிக்க பெர்ஸ்ட் லிபாபுலிக் வங்கியின் நிதி நிலையில் தெளிவான பதற்றம் காணப்பட்டுள்ளது. புதிய நிலவரப்படி, முதலாவது காலாண்டில் இவ்வங்கியின் கையிருப்பிலிருந்து 10 ஆயிரம் கோடி டாலர் பணம் வெளியேற்றப்பட்டுள்ளது.

நடப்பு வங்கி நெருக்கடி ஏற்பட்ட மார்ச் 8ஆம் நாள் முதல் இதுவரை, இவ்வங்கி பங்குகளின் மதிப்பு 95 சதவீதம் சரிவடைந்த்து. சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவற்றை அடுத்து பெர்ஸ்ட் லிபாபுலிக் வங்கி 3ஆவது திவாலான வங்கியாக மாறக் கூடும் என்று கூறப்படிகிறது.

நடப்பு வங்கி நெருக்கடிக்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி பொறுப்பு என்பதை நிராகரிக்க முடியாது என்று அமெரிக்க பொருளியலாளர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். மேலாண்மை வாரியத்தின் முட்டாள் தனமான செயல்களே அமெரிக்க வங்கித் துறைகளின் நெருக்கடிக்குக் காரணம் என்று முதலீட்டாளர் வாரன் பபெட் குறிப்பிட்டார்.