ஆசியாவில் மிக ஆழமான எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறு
2023-05-01 16:40:52

தரிம் வடிநிலத்திலுள்ள “யுஜின் 3-3 எக்ஸ்சி எண்ணெய் மற்றும் எரிவாயு கிணற்றின் துளைத்தல் பணி” மே முதல் நாள் தொடங்கப்பட்டது. 9472 மீட்டர் ஆழம் கொண்ட இது ஆசியாவின் மிக ஆழமான எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறு சாதனையப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சீனாவின் மீ ஆழ் கிணறு துளைத்தல் தொழில்நுட்பம் உலகின் முன்னணியில் இருப்பதை இது மீண்டும் நிரூபித்துள்ளது. எதிர்காலத்தில் 10 ஆயிரம் மீட்டர் ஆழமான எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறைத் தோண்டுவதற்கு முக்கியமான தொழில்நுட்பம் மற்றும் சாதன ஆதரவை இது வழங்கும் என்று சீனாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வள ஆய்வுத் துறையில் தலைமை நிபுணர் யிண்ட் லிக்சின் கூறினார்.