துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா கலப்பு அணி வெற்றி
2023-05-01 17:26:23

எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்ற ஷாட்கன் உலக்க் கோப்பை போட்டியின் கலப்பு அணிப் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மைராஜ் அகமது கான் மற்றும் கனமட் ஷெஹான் இணை தங்கப் பதக்கம் வென்றது.

30 அணிகள் பங்கேற்ற தகுதிச்சுற்றுக்குப் பின் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்திய அணி, மெக்சிகோ அணியை 6-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி கண்டு தங்கப் பதக்கம் வென்றது.

இருமுறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மைராஜ், கடந்த ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற போட்டியில் தனிநபர் போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.