அமெரிக்க பெர்ஸ்ட் லிபாபுலிக் வங்கியைக் கையகப்படுத்திய ஜே.பி மோர்கன்
2023-05-02 16:32:55

அமெரிக்காவின் பெர்ஸ்ட் லிபாபுலிக் வங்கி மே முதல் நாள் கலிபோர்னிய மாநில நிதிப பாதுகாப்பு மற்றும் புதுமை வாரியத்தால் மூடப்பட்டு, அந்நாட்டின் வங்கித் துறை கண்காணிப்பு நிறுவனமான அமெரிக்க பெடரல் சேமிப்புக் காப்பீடு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது. அதே நாள், இந்நிறுவனம் ஜே.பி மோர்கன் நிறுவனத்துடன் உடன்படிக்கையை உருவாக்கியது. அதன்படி, பெர்ஸ்ட் லிபாபுலிக் வங்கியின் அனைத்துச் சேமிப்புகளையும் மிகப் பெரும்பான்மை சொத்துக்களையும் ஜே.பி மோர்கன் கையகப்படுத்தியது.

ஜே.பி மோர்கன் உள்ளிட்ட பல வங்கிகள் கடந்த மார்ச் திங்களில் பெர்ஸ்ட் லிபாபுலிக் வங்கிக்கு உதவி அளிக்க 3000 கோடி டாலர் வைப்புத் தொகையை வழங்கின. ஆனால், இவ்வங்கியின் நெருக்கடி தொடர்ந்து தீவிரமாகியதால், அதன் பங்குகளின் மதிப்பு விரைவாக வீழ்ச்சி அடைந்தது. இவ்வாண்டில் அமெரிக்க பெடரல் சேமிப்புக் காப்பீடு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்ட மூன்றாவது வங்கியாக இது மாறியது.