ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சின் கேங் பங்கேற்பு
2023-05-02 17:03:43

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான சின் கேங் மே 2 நாள் முதல் 5ஆம் நாள் வரை மியன்மார் மற்றும் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றார். அவர், இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் 2ஆம் நாள் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டின் ஜனவரியில் மியன்மாரில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பயணத்தின் சாதனையை நடைமுறைப்படுத்துவது சின் கேங்கின் இப்பயணத்தின் நோக்கமாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், பிற உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் சர்வதேச மற்றும் பிரதேசத்தின் நிலைமை, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பு முதலிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளார். மேலும், நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டுக்கு இக்கூட்டத்தில் பன்முக ஆயத்தம் செய்யப்படும் என்று மோவோ நிங் கூறினார்.