அரசியல் மூலம் சிரிய பிரச்சினையைத் தீர்ப்பது
2023-05-02 16:20:04

ஜோர்டான், சௌதி அரேபியா, ஈராக், எகிப்து, சிரியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மே முதல் நாள் ஜோர்டானின் தலைநகரான அம்மானில் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசியல் மூலம் சிரிய பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து அவர்கள் முக்கியமாக விவாதித்தனர்.

அரசியல் மூலம் சிரிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது, சிரிய தேசிய ஒற்றுமை மற்றும் இறையாண்மையைப் பேணிகாக்கும் அடிப்படையில் இருக்க வேண்டும். சிரிய அகதிகள் சுயவிருப்பத்துடன் பாதுகாப்பாக தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பவும், சிரியாவில் பாதுகாப்பு மற்றும் நிதானத்தை மீட்டெடுக்கவும் இது உதவ வேண்டும். வெளிநாட்டுப்படை சிரியாவிலிருந்து வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று இப்பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் தெரிவித்ததாக ஜோர்டான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.