சின் கேங் மற்றும் நொலின் ஹேசல் அமைச்சரின் சந்திப்பு
2023-05-02 16:19:31

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான சின் கேங் மே முதல் நாள் பெய்ஜிங்கில் மியன்மார் விவகாரத்துக்கான ஐநா தலைமைச் செயலாளரின் சிறப்பு தூதர் நொலின் ஹேசல் அம்மையாரைச் சந்தித்துப் பேசினார்.

மியன்மார் பிரச்சினை சிக்கலானது. சர்வதேசச் சமூகம் மியன்மார் இறையாண்மைக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டக் கட்டுக்கோப்புக்குள் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் மியன்மாரிலுள்ள அனைத்து கட்சிகள், வேறுபாடுகளைக் குறைப்பதற்கும் அரசியல் மாற்றத்தின் செயல்முறையை மீண்டும் துவக்குவதற்கும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் சிறப்பு தூதரின் இணக்க முயற்சிக்கு ஆதரவுகளையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்க சீனா விரும்புகின்றது என்றும் சின் கேங் தெரிவித்தார்.