நேபாளத்திலுள்ள சீன மருத்துவக் குழு வழங்கிய இலவச சேவை
2023-05-02 18:39:36

1999ம் ஆண்டுக்குப் பிறகு, நேபாளத்துக்கு 200க்கும் மேலானோர் அடங்கிய 14 மருத்துவக் குழுகளை, சீனா அனுப்பியுள்ளது. இவ்வாண்டின் மே தின விடுமுறையில், சீன மருத்துவக் குழு, காத்மாண்டில் இலவச மருத்துவச் சேவை வழங்கியதுடன், சுமார் 1000 நேபாள மக்கள் மற்றும் சீனர்களிடம் உடல் நலப் பரிசோதனை செய்துள்ளது.

தவிரவும், உள்ளூரில் போக்குவரத்து சிரமத்தைக் கருத்தில் கொண்டு, சீன மருத்துவக் குழு, நேபாளத்தின் பல இடங்களில் 10க்கும் மேலான அறக்கொடை மருத்துவமனைகளை அமைத்து, இணைய மருத்துவச் சேவையை வழங்குகின்றது. ஏப்ரல் 28ம் நாள் நேபாள தலைமை அமைச்சர் பிரசண்டா, சீன மருத்துவக் குழுவினருக்கு “தேசியச் சுகாதாரப் பாதுகாவலர்”பதக்கம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.