தென் கொரிய வெளியுறவு நடவடிக்கை எதிர்க் கட்சியினர் எதிர்ப்பு
2023-05-03 18:33:16

தென் கொரியாவின் மிகப் பெரிய எதிர் கட்சியான கொரிய மின்ச்சோ கட்சி செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அரசு நடைமுறைப்படுத்திய தவறான வெளியுறவுக் கொள்கை பனிப்போர் காலத்தில் இருந்து விலகவில்லை என்று குறை கூறியது. அரசுத் தலைவர் யுன் சிக்யோலின் அமெரிக்கப் பயணம் மக்களுக்கு உண்மையான நலன்களைக் கொண்டு வரவில்லை. மேலும், சித்தாந்தம் தன்மை வாய்ந்த தூதாண்மை உறவில் அரசு கவனம் செலுத்துகின்றது. ஆனால், சித்தாந்தம் கட்டுக்கோப்புக்குள் சிக்கியுள்ள தூண்தாண்மை உறவு தென் கொரியாவின் நலன்களைப் பாதிக்கும் என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

வெனிசுவெலாவைச் சேர்ந்த சர்வதேச விவகாரத்துக்கான நிபுணர் ஹாய்மேய் கூறுகையில், தற்போது, தென் கொரியாவும் அமெரிக்காவும் பிரதேசச் சமநிலையை முறியடித்து வருகின்றன. இம்முயற்சி உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்தார்.