மின் ஆங் ஹ்லிங் மற்றும் சின் கேங் சந்திப்பு
2023-05-03 16:59:46

மியன்மார் தலைவர் மின் ஆங் ஹ்லிங் சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான சின் கேங்கை நெய்பிடாவில் மே 2ஆம் நாள் சந்தித்தார்.

சர்வதேசச் சமூகம் மியன்மார் இறையாண்மைக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் சீனா, மியன்மாரின் அமைதியையும் தேசிய நல்லிணக்கத்தையும் நனவாக்க ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளது என்று சின் கேங் தெரிவித்தார். மியன்மாரின் வளர்ச்சிக்கு இயன்ற உதவிகளைச் சீனா தொடர்ந்து வழங்கவுள்ளது. மியன்மாருக்கும் வங்காளத்தேசத்துக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும் சீனா ஆதரவு அளிக்கின்றது. இவ்விரு நாடுகளுடன் இணைந்து பயனுள்ள ஒத்துழைப்பை விரிவாக்க சீனா விரும்புகின்றது என்றும் சின் கேங் தெரிவித்தார்.

மியன்மாருடன் தொடர்புடைய பிரச்சினையில் நியாயமான நிலைப்பாட்டைச் சீனா கொண்டுள்ளது. சீனா மேலதிக பங்கு அளிக்க வேண்டும் என்று மின் ஆங் ஹ்லிங் விருப்பம் தெரிவித்தார்.