காசா பிரதேசம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்
2023-05-03 16:55:08

மே 2ஆம் நாள் காசா பிரதேசத்திலிருந்து இஸ்ரேல் மீது தொடுத்த ராக்கெட் தாக்குதலுக்குப் பதிலடியாக, அன்று இரவு, காசா பிரதேசத்திலுள்ள பல ராணுவ இலக்குகள் மீது, இஸ்ரேல் தேசியப் பாதுகாப்புப் படை, போர் விமானம் மூலம், வான் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் தேசியப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, பாலஸ்தீன ஆயுதப்படையின் பல ராணுவத் தளங்கள், பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் ஒரு சுரங்கப்பாதை ஆகியவை தாக்கப்பட்டுள்ளன.

2ஆம் நாள் காலை மற்றும் மாலை, 10க்கும் மேலான ராக்கெட் குண்டுகள், காசாவிலிருந்து இஸ்ரேலின் தென்பகுதி மீது வீசப்பட்டன. பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் உயர்நிலை அதிகாரி ஒருவர், இஸ்ரேல் சிறையில் உயிரிழந்த சம்பவத்துக்குப் பழிவாங்கும் விதம் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.