செங்டு மாநகரில் திரண்ட சுற்றுலா பயணிகள்
2023-05-04 17:19:06

மே தின விடுமுறை நாட்களில் சுமார் 1கோடியே 93இலட்சத்து 94ஆயிரம் பயணிகள் சீனாவின் செங்டு(Chengdu) மாநகருக்கு வருகை தந்தனர். அங்கு புகழ்பெற்ற ச்சுன்ஷி சாலை (Chunxi Road) எனும் வணிக வளாகம் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக விளங்கியது. கடந்த விடுமுறை நாட்களில் அங்கு சென்ற பயணிகளின் எண்ணிக்கை 48 இலட்சத்தைத் தாண்டியது. இது, கடந்த ஆண்டை விட 34.3 சதவீதம் அதிகம். மேலும், மொத்த விற்பனை வருவாய் கடந்த ஆண்டை விட 36.9சதவீதம் அதிகம்.

இவ்வாண்டின் ஜனவரி 9ஆம் நாள், ச்சுன்ஷிலு வணிக வளாகம், தேசிய நுண்ணறிவு வணிக வளாகங்களின் முதல் கட்ட பட்டியலில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.