பாகிஸ்தானில் சீன வெளியுறவு அமைச்சர் பயணம்
2023-05-04 15:33:59

சீன வெளியுறவு அமைச்சர் சின்காங் மே 5ஆம் நாள் முதல் 6ஆம் நாள் வரை, பாகிஸ்தானில் பயணம் மேள்கொள்வார். அதேவேளையில், அந்நாட்டில் சீன-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர்களிடை முத்தரப் பேச்சுவார்த்தையிலும் அவர் கலந்துகொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 4ஆம் நாள் அறிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்ற பிறகு, பாகிஸ்தானில் சின்காங் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.  இப்பயணத்தின் போது, பாகிஸ்தான் தலைவர்களுடன் சந்தித்துரையாடுவார். மேலும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருடன் சேர்ந்து, 4வது சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நெடுநோக்குப் பேச்சவார்த்தைக்கு தலைமை தாங்குவார் என்று செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையும், சீன- ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகள் முத்தரப்பு பேச்சுவார்த்தையும், ஆப்கானிஸ்தான் பிரச்சினை தொடர்பான ஒத்துழைப்பு பற்றியும் பரிமாற்றத்திற்கான முக்கிய மேடையாகும். முத்தரப்புகளிடை நம்பிக்கையை வலுப்படுத்தி, பிரதேசத்தின் அமைதி, நிதானம், செழுமையான வளர்ச்சியை இப்பேச்சுவார்த்தை ஊக்குவிக்க வேண்டும் என்று சீனா எதிர்பார்க்கிறது.